நமக்காக நாமே தேர்தல் பிரசாரப் பயணம் இன்றும் கிளிநொச்சியில்

0
82

தமிழ்ப் பொது வேட்பாளரின் நமக்காக நாமே தேர்தல் பிரசாரப் பயணம் 3வது நாளாக இன்றும் கிளிநொச்சிப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
வட்டக்கச்சி, தர்மபுரம், பரந்தன், கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இன்று நமக்காக நாமே தேர்தல் பிரசாரப் பயணம் இடம்பெறுகின்றது.

கரடிப்போக்கு சந்தியிலிருந்து நேற்று பிரசாரப் பயணம் ஆரம்பமானதுடன் தேர்தல் பிரசாரப் பயணத்தின் போது முழங்காவில் துயிலும் இல்லம் மற்றும் கனகபுரம் ததுயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவு கோரி முன்னெடுக்கப்படுகின்ற நமக்கு நாமே பொலிகண்டி முதல் பொத்துவில் வரையான தேர்தல் பிரசாரப் பயணம் கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிகண்டியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தேர்தல் பிரசாரப் பயணத்திற்கு பெருமளவிலானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது,