நமீபியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் காலமானார்

0
38

நமீபியாவின் முதல் சுதந்திரப்போராட்டத் தலைவர் சாம் நியோமா காலமானார்.

அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆபிரிக்க நாடான நமீபியா தென்னாபிரிக்காவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு சாம் நியோமா சுதந்திரப்போராட்டத்தலைவராக பாரிய பங்களிப்பு  வழங்கியுள்ளார்.

அந்நாட்டின் முதல் ஜனாதிபதியாக சாம் நியோமா மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த தலைவராவார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாம் நியோமா தனது 95 ஆவது வயதில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.