நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் (RDD) ஆகியவர்களுக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இச் சந்திப்பில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இரண்டு வீதிகள் மற்றும் ஒரு வீதி அகலிப்பு போன்ற விடயங்களுக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் கொக்குவில் சந்தியில் இருந்து ஆணைக்கோட்டை செல்லும் ஆடியபாதம் வீதி மற்றும் பொற்பதி வீதி புனரமைப்பு செய்ய இணக்கம் தெரிவிக்கபட்டது.
அத்துடன் கொக்குவில் சந்தி மற்றும் கல்வியங்காடு சந்தி ஆகியவற்றில் வீதி சமிஞ்சைகள் இடும் நோக்குடன் அந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் அகலிப்பு செய்யவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இவ் வேலைகள் மிக துரிதமாக ஆரம்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.