அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிலிருந்து அதன் தலைவர் கேத்ரின் கால்வின் உட்பட 23 ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, நாசா திடீரென அதன் தலைமை அலுவலகம், மற்றும் 2 அலுவலகங்களிலும் உள்ள 23 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து நாசாவின் முதல்முறை நடைபெறும் பணிநீக்கம் இதுவாகும்.