நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று இடம்பெறுகின்றது !

0
43

நாடளாவிய ரீதியில்  இன்று ஞாயிற்றுகிழமை (15) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுகின்றது.

இதன்படி ,  புலமைப்பரிசில் பரீட்சை  நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் இடம்பெறுகின்றதுடன் 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.  

பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  

அதேநேரம், புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.