எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தனித்து களமிறங்கவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.