நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் பதில் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) நாடாளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் பலமுறை விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.