நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான புதிய குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்ததன் பின்னர் குறித்த குழுவின் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.
அமைச்சர்களான சமல் ராஜபக்ஸ, நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், டக்ளஸ் தேவாநந்தா, பசில் ராஜபக்ஸ, விமல் வீரவங்ச, மகிந்த அமரவீர, வாசுதேச நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, மற்றும் அலி சப்ரி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க, ரிஷாட் பதியுதீன், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.