நாடுமுழுவதுமிருந்து கலக தடுப்பு உபகரணங்கள்

0
225
மேல் மாகாணத்தில் இடம்பெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக நாட்டின் 12 பொலிஸ் பிரிவுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கண்ணீர்ப்புகை முகமூடிகள், கலவர எதிர்ப்பு கவசங்கள் மற்றும் தலைக்கவசங்கள், ரப்பர் தோட்டாக்கள் என்பன கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸ் துணை சேவைகள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த இது தொடர்பான உத்தரவை பிரிவுகளுக்கு பொறுப்பான 12 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு நேற்று வழங்கியிருந்தார்.அந்த 12 பிரிவுகளின் கட்டுப்பாட்டில் இருந்த 575 முகமூடிகள், 450 கலவர தடுப்பு கவசங்கள், 505 கலவர தடுப்பு தலைக்கவசங்கள் மற்றும் 1050 ரப்பர் தோட்டாக்கள் நேற்று மத்திய ஆயுதக் களஞ்சியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .கொழும்பின் மையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்களை ஒடுக்கும் வகையிலும் தடுக்கும் வகையிலும் கலக எதிர்ப்பு உபகரணங்கள் சேவையின் தேவை கருதி இவை கொண்டுவரப்பட்டதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .அநுராதபுரம், மட்டக்களப்பு, எல்பிட்டிய, குருநாகல், மாத்தளை, பொலன்னறுவை, தங்காலை, கண்டி, கந்தளாய், நுவரெலியா, புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகிய பிரிவுகளிலுள்ள பொலிஸ் களஞ்சியசாலைகளில் இருந்து இந்தக் கலவர எதிர்ப்பு உபகரணங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.