நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியம் : பியால் நிஷாந்த எம்.பி

0
150

அரசியல் இலாபத்தை கருத்திற்கொண்டு செயற்படாது நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாகவும் நாட்டைப்பற்றி சிந்தித்து நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அந்த முயற்சியை வெற்றியடையச் செய்வதற்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டியது அவசியமாகும்.

இன்று இந்த நாட்டின் பிள்ளைகள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியால் மாணவர்களின் கல்வி சீர்குலைந்துள்ளது.

நாட்டில் தற்போது எரிபொருள் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை, மின்வெட்டு தொடர்பில் பேசுகின்றனர். எனினும் மாணவர்கள் தொடர்பில் கதைப்பதற்கு சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் கதைப்பதற்கு முன்பாக மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவளமளிக்க வேண்டியது அவசியமாகும்.

கொரோனா தொற்று, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால், மாணவர்களின் கல்வி சீர்குலைந்துள்ளது.

மாணவர்கள் கல்வியை இழப்பது கொரேனா தொற்றினால் இறப்பதற்கு சமமாகும்.

மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தற்போது கல்வி அமைச்சர் இது தொடர்பில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

அதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டியது அவசியம்.

சிறுவர்கள் இந்த நாட்டின் பெறுமதியான வளம் என்றால் சிறுவர்கள் அவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

தற்போது தொடர்ச்சியாக சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கதைக்கப்பட்டு வருகின்றது.

சர்வகட்சி அரசாங்கத்துக்கு பங்களிப்பவர்கள் அந்த பங்களிப்பின் மூலம் இந்த வீழ்ச்சியடைந்த நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்து அதிக கவனம் செலுத் வேண்டும்.