நாட்டிற்கு கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2022 ஜனவரி முதல் ஜூலை வரை, வெளிநாட்டுப் பணியாளர்கள் பெற்ற வெளிநாட்டு வருமானம் ஆயிரத்து 889.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பெற்ற வெளிநாட்டு வருமானமாக 3 ஆயிரத்து 777.6 அமெரிக்க டொலர் ஆக காணப்பட்டது. அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு வருமானம் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.