நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

0
219

கொரோனா தொற்றுக் காரணமாக, மேலும் 28 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தினால், அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 15 ஆயிரத்து 572 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களில், மேலும் 550 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 இலட்சத்து 80 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், நேற்று மாலை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், நாட்டில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 இலட்சத்து 15 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களைத் தவிர்த்து, தற்பொழுது, 19 ஆயிரத்து 560 தொற்றாளர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர்.