நாட்டில் ஒரு வருடத்தில் ஆயிரத்து 700 குழந்தைகள் தத்துக் கொடுக்கப்படுகின்றனர் என பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தத்துக்கொடுக்கப்படும் அதிகளவான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கே கொடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் தத்துக்கொடுக்கும்போது அது தொடர்பில் பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடி, திருமணத்துக்கு புறம்பான உறவுகள் போன்ற காரணங்களாலேயே பிறந்த குழந்தைகள் தத்துக் கொடுக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கருக்கலைப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.