28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 124 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, ஒரு மந்த நிலையை காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தரும் வேகம் ஜூலை மாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் இரண்டு மாதங்களில் மேலும் குறையும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளாந்த வருகை சராசரி 5 ஆயிரத்து 100 என்ற அளவில் குறைந்துள்ளதுடன், வாராந்தம் சராசரி 35 ஆயிரம் ஆக குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மந்தநிலை அசாதாரணமானது அல்ல எனவும் மாதாந்த சுற்றுலா பயணிகளின் வருகை போக்குகளை பார்க்கும்போது, தொற்றுநோய்க்கு முன்பே, முதல் காலாண்டில் ஒரு உயர்வுக்கு பிறகு, ஏப்ரல் மாதத்தில் மந்தநிலை காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 17 வீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

11 வீதமானவர்கள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதோடு, 10 வீதமானவர்கள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles