நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது- தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு!

0
44

நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் 2024 இன் இதுவரையான காலப்பகுதி வரை 41 ஆயிரத்து 866 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.