நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வர நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்ப்புக்கள் ஏதும் நிறைவேறவில்லை. முறையற்ற வகையில் செயற்பட்டார்; நாட்டுக்கு அழிவை மாத்திரமே மிகுதியாக்கினார். யஆகவே, இரண்டரை வருட காலத்தில் மக்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகியதையிட்டு நாங்கள் கவலையடையவில்லை என தெரிவித்தார்.