நாட்டை முன்னேற்ற அனைவரும் ஆதரவளிப்பதே இன்றைய பணியாகும் – தினேஷ் குணவர்தன

0
81

சர்வதேச சமூகத்தில் எமது நாடு அடைந்துள்ள அங்கீகாரத்தை மேலும் வளர்த்து, முன்கொண்டு செல்வதற்கு ஆதரவளிப்பதே இன்று நாம் செய்ய வேண்டிய பணியாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற கிராமியப் பதிவாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நீங்கள் மனித சமுதாயத்தின் இருப்புக்கும் முன்னேற்றத்துக்கும் மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்றி வருகிறீர்கள். சில நீண்ட கால சட்டதிட்டங்கள் மாறும்போது நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், நட்புரீதியான பேச்சுவார்த்தை மூலம் அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது. நீங்கள் குடிமக்கள் தொடர்பான கடினமான, திருப்தியான வேலையைச் செய்தாலும், அதைச் சரியாகச் செய்யாவிட்டால், அது பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.
நாட்டில் நிலவிய அமைதியின்மை காரணமாக 40 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த மூன்று வயோதிபர்கள் எங்களைச் சந்திக்க வந்தனர். அவர்களைப் பற்றிய எந்தப் பதிவேடும் கிடைக்கவில்லை.

நான் இங்கு வாழ்ந்தேன் என்பதை மட்டுமே அவர்களால் காட்ட முடியும். அப்போதிருந்து, உங்களின் விலைமதிப்பற்ற ஆவணங்களைத் திரும்பிப் பார்ப்பதன் மூலம் அவர்களின் உரிமையை உங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.
யாழ் நகரபிதா துரையப்பா அவர்கள் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அலரி மாளிகைக்குச் சென்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிய வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
40 வருடங்களுக்குப் பின்னர், வெளிநாட்டில் இருந்த அவரது பிள்ளைகள் தமது சட்டப்பூர்வ வாரிசுரிமை மற்றும் தந்தைக்கான அரச உரிமைகள் தொடர்பாக இலங்கைக்கு வந்தனர். நீங்கள் சேகரித்த பெறுமதிமிக்க ஆவணங்களைப் பயன்படுத்தியே இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும். நீங்கள் அத்தகைய மதிப்புமிக்க, சவாலான, கடமையில் ஈடுபட்டுள்ளீர்கள்.