நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி

0
103

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டி கொல்கத்தாவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

புள்ளிப் பட்டியலில் பங்களாதேஷ் 9 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 7 ஆவது இடத்திலும் உள்ளன.

இதுவரை பாகிஸ்தான் விளையாடிய 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் விளையாடிய 6 போட்டிகளிலும் 1 வெற்றியை மாத்திரமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.