28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நான்கு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி. தொடவத்த, ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ  ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இதில் கலந்துகொண்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles