நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜனவரி மாதம்!!

0
7

சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டுள்ளார்.

இந்த மனு இன்றைய தினம் காலை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இந்த மனுவுடன் தொடர்புடைய நாமல் ராஜபக்ஷவும் ஏனைய பிரதிவாதிகளும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த மனு மீதான நீதிமன்ற அறிக்கைகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.

இதனை கருத்தில்கொண்ட நீதவான் இந்த மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.