நாடளாவிய ரீதியில், நேற்று முதல், மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.