தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் படங்கள் நடித்து மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகர் சித்தார்த்.
நடிகராக, பாடகராக கலக்கிவரும் சித்தார்த் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமும் படங்களை தயாரித்து வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் சித்தா என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக சித்தார்த்த சிறந்த நடிகர் என்ற விருதெல்லாம் பெற்றார்.
இவரும், நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது, பின் சில நாட்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவின.
இதையடுத்து இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக புகைப்படம் வெளியிட்டு எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த்திடம் திருமணம் எப்போது என கேட்டபோது, நிறைய பேர் நாங்கள் ரகசியமாக இதை வைத்திருக்கிறோம் என்று கூறுகின்றனர். ரகசியமாக எதையாவது செய்வதற்கும் குடும்பத்துடன் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
திருமண முடிவை குடும்ப பெரியவர்கள் எடுப்பார்கள், இது படப்பிடிப்பு இல்லை நான் ஒரு தேதியை தேர்வு செய்ய. இது வாழ்நாளில் எடுக்கும் முக்கியமான தேதி, எப்போது அவர்கள் திருமணம் செய்ய சொல்கிறார்களோ அப்போது அது நடக்கும் என கூறியுள்ளார்.