25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலையில் நோயாளர் விடுதிற்கான அடிக்கல் நாட்டல்

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் பயணத்தடை காலத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட விரோத மண் அகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கித்துள் பகுதியில் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதில் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 30 மீனவர்கள் விவசாயிகள் குறித்த ஆற்றுப்பகுதியில் சமூக இடைவெளியைப் பேணி தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காட்டு யானைகளின் தாக்குதல்கள் முதலைகளின் அச்சத்திற்கு மத்தியிலும் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் தமக்கு சட்டவிரோத மண் அகழ்வோர் பாரிய இடையூறுகளை அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காட்டு யானைகளின் அட்டகாசம் ஆற்றில் முதலைகளின் அச்சத்திற்கு மத்தியில் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் தமக்கு சட்டவிரோத மண் அகழ்வோர் பாரிய இடையூகளை ஏற்படுத்துவதாகவும் இதன்போது கவலை வெளியிட்டுள்ளனர்

இரவு பகலாக குறித்த ஆற்றை ஊடறுத்து இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தாம் தொழிலுக்கு ஆற்றைக் கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுவதாகவும் ஆற்றுப்பகுதி ஆழமாகி செல்வதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள் தாம் செல்லும் வீதியும் நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மண் அகழ்வோரிடம் வினவும் போது அவர்கள் தம்மை தாக்குதவதற்கு முற்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, கித்துள் வடிச்சல் ஆற்றுப்பகுதியால் இடம்பெறும் மணல் அகழ்வை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களாக இந்த பிரச்சினையை எதிர்நோக்குவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவை முறையிட்டும் இதை தடுக்க முடியாதுள்ளதாக குற்றம் சாட்டும் மீனவ விவசாயிகள்தமது பிரச்சிணை தொட ர்பில் சம்மந்தப்பட்டவர்கள் கவனம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles