நியூ ஸிலாந்தில் விடுதியொன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெலிங்டன் நகரிலுள்ள இவ்விடுதி இன்று அதிகாலை தீப்பற்றியது. லோபர்ஸ் லொட்ஜ் ஹொஸ்டல் எனும் இவ்விடுதியே தீப்பற்றியது.
52 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விடுதியிலிருந்த பலர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
94 அறைகள் கொண்ட இவ்விடுதியில் 92 பேர் தங்கியிருந்தனர் என கட்டட முகாமையாளர் மேரி மார்பி தெரிவித்துள்ளார். எனினும், தீப்பரவலின்போது அவர்கள் அனைவரும் அங்கு இருந்தனரா என்பது தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.