நீர்த்தேக்கத்தில் விழுந்து ஹெலிகொப்டர் விபத்து ; 6 பேர் உயிரிழப்பு!!

0
16

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான படை வீரர்களின் அணிவகுப்பொன்றின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட  12 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விமான படையின் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.