தேசிய வெசாக் விழா நடைபெறும் நுவரெலியாவிற்கு வருகை தரும் பக்தர்கள், பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு கழிவுகள் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதையும், அவற்றை முறையற்ற முறையில் வீசுவதையும் தவிர்க்குமாறு “Clean Sri Lanka” திட்டம் கேட்டுக்கொள்கிறது.
அழகிய நுவரெலியாவின் மிகவும் உணர்வு திறன் வாய்ந்த சுற்றுச்சூழலின் தூய்மையைப் பாதுகாப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அழியாத பொருட்கள் மற்றும் பல்வேறு கழிவுகளை இடும்போது பொருத்தமான இடங்களில் மட்டுமே அதனை இட வேண்டும் என்றும், சட்டத்தை மதிக்கும் பொதுமக்கள் பொறுப்புடன் கழிவுகளை முறையான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இந்த திட்டத்தினூடாக கேட்டுக்கொள்கிறது.
நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறும் அரச வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், நுவரெலியா நகரில் கழிவுகளை நிர்வகிப்பதற்கும் “Clean Sri Lanka” திட்டம் பல சிறப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.வெசாக் விழாக்களின்போது இலட்சக்கணக்கான பக்தர்கள் நுவரெலியாவிற்கு வருகை தருவார்கள் என்று நம்பப்படுகிறது.
அதன்படி, கிரகரி ஏரி மற்றும் நுவரெலியா சர்வதேச பௌத்த மையத்தைச் சுற்றி இந்த சிறப்பு கழிவு அகற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வெசாக் போயா தினமான நேற்று (12) நுவரெலியாவில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால், நகரின் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.