நுவரெலியா மாவட்டத்தில், டியன்சின் -சாஞ்சிமலை பிரதான வீதியின், பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக, மரம் அடியோடு சரிந்து விழுந்ததாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். அதனையடுத்து, மரத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகம் முன்னெடுத்தது.