நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட அங்கவீனமுற்றவர்களுக்கான செயற்கை கால் மற்றும் ஏனைய உதவிகள் வழங்கும் நிகழ்வு, இன்று, நுவரெலியா மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்றது.
நுவரெலியா கெலேகால சுவசக்தி அங்கவீனமுற்றவர்கள் சங்கத்தினால் ஏற்பாட்டில், சிவில் சமூக அமைப்புகளின் அனுசரணையுடன், உதவி வழங்கப்பட்டது.
இதன் போது, தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது.

இதில், சிவில் சமூக அமைப்பினர், மருத்துவர்கள் பங்கேற்றனர்.



