நுவரெலியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில் அங்கிருந்த பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா நகரசபை தீயணைப்புப் பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உணவகத்தில் வழக்கம் போல சமையல் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, சமையலறையில் இருந்து புகை மற்றும் வெப்பத்தை அகற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவால் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.