நுவரெலியா ஹட்டன் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட போடைஸ்,ஹெட்லி,காசல்ரி ஆகிய பகுதிகளுக்கு நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேலு ஊடாக உலர் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற இச்சூழ்நிலையில், நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அநேகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம்,மண்சரிவு மற்றும் கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட 21 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொருட்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளிற்கு அமைய நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தை வேலு ஊடாக வழங்கப்பட்டது.