நுவரெலியாவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை!

0
92

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை, இன்று அதிகாலை 5.00 மணி முதல் முற்பகல் 9.00 மணி வரை, நுவரெலியா மஹிந்த மாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைவாக, நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பிரேமலால் ஹெட்டியாராச்சி தலைமையில், நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவ விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

மஹிந்த மாவத்தை பகுதியில், போதைப்பொருள் பாவனை அதிகமாக இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ச்சியாக இவ்வாறான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.