சிறுவர் தினத்தை முன்னிட்டு, நுவரெலியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் தொனிப்பொருளில் இன்று சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.நுவரெலியா பொலிஸாரின் ஏற்பாட்டில், வித்தியாசமாக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.
சிறுவர்கள் குதிரையில் அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு பொலிஸ் அதிகாரிகள் ரோஜாக்களை கொடுத்து வரவேற்றனர்.நுவரெலியா ஏரிக்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பல சிறுவர்களை மகிழ்விக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
நுவரெலியா பொலிஸ் நிலைய இசைக்குழுவினரால் சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும், பாடல்களை இரசிக்க அவர்களை பழக்கப்படுத்தும் வகையிலும் இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மானவின் மேற்பார்வையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நுவரெலியா மன்காஃப் கல்வி நிறுவனத்தின் விசேட தேவையுடைய சிறுவர்கள் உட்பட நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.