நுவரெலியா டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலய அதிபரை மாற்றுமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

0
53

நுவரெலியா ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலய அதிபரை மாற்றுமாறு கோரி இன்று பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

அதிபரின் சில தனிப்பட்ட நடவடிக்கைகளால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் ஒழுக்கம் பாதிக்கபடுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதிபர் குறித்து ஹட்டன் கல்வி வலயத்திற்கு பெற்றோர்கள் முறைப்பாடுகளை முன்வைத்த போதும் ஹட்டன் வலய கல்வி பணிமனை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்து வித்தியாலயம் முன்பாக மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.