நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் காற்றுடன் கூடிய மழை காரணமாக, 61 பேர் பாதிப்பு

0
223

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டியன்சின் தோட்டத்தில், 15 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பு ஒன்றில், 12 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த 15 ஆம் இலக்க லயன் குடியிருப்பு தாழ் இறங்கியுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அதனால், லயன் குடியிருப்பில் 12 வீடுகளும், தொழிற்சாலை பகுதியில்
இரண்டு வீடுகளும் என, 14 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குடியிருப்பில் வசித்து வந்த மக்களின் உபகரனங்கள் சில சேதமடைந்துள்ளதாகவும், அதனையடுத்து, 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேரும், தோட்டத்தில் உள்ள சிருவர் பாராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் இரமேஸ்கன்னா தெரிவித்தார்.

அந்தவகையில், பாதிக்கபட்ட மக்களுக்கு, கிராம உத்தியோகத்தரின் நடவடிக்கை மூலம், சமைத்த உணவு வகைகளும் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.