நுவரெலியா பொகவந்தலாவ மானா தோப்புக்கு, இனம்தெரியாத நபர்கள் வைத்த தீயினால், 5 ஏக்கர் நாசம்

0
160

நுவரெலியா பொகவந்தலாவ சென் மேரீஸ் தேசிய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள மானா தோப்புக்கு, இனம் தெரியாத நபர்கள் வைத்த தீயினால், 5 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம், இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன் போது, பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.