நுவரெலியா  பொது வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கங்கள்  போராட்டம் – வைத்தியசாலை நடவடிக்கைகள்  ஸ்தம்பிதம்

0
90

“20,000/= வெற்றிக்கொள்ளும் ஒண்றிணைந்த தொடர் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்” எனும் தொனிப்பொருளில்  09 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்று போராட்டத்தில்  ஈடுபட்டதால் வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தனசிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வந்த  நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.  குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்து விநியோகப் பிரிவு என்பன காலை 7 மணி முதல் நண்பகல் 12 செயலிழந்து காணப்பட்டது . எனினும் நண்பகலுக்கு பிறகு மருந்து விநியோகிக்கப்பட்டமையால் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.