நுவரெலியா நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் பொது மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் (19) இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதி அண்டிய வளாகத்தில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நீதிமன்றுக்கு செல்லும் மக்களை பிரதான நுழைவாயிலில் முன்பாக வரிசையாக நிறுத்தி, அவர்களையும் அவர்கள் எடுத்துச் செல்லும் பொதிகளையும் கடுமையாக சோதனையிடப்பட்ட பின்னரே நீதிமன்றிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் பிரதான நுழைவாசலில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.