30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நுவரெலியா மீப்பிலிமான பகுதி விவசாயிகள், காணியை வழங்க கோரிக்கை!

நுவரெலியா மீப்பிலிமான பகுதியில், அரசாங்கத்திற்கு சொந்தமான 14 ஏக்கர் காணியை, தனிநபர் ஒருவர், சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றமையால், குறித்த காணியை, நுவரெலியா மீப்பிலிமான பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீப்பிலிமான பகுதியில் உள்ள மக்கள், பிரதான தொழிலாக விவசாயத்தினையே நம்பியுள்ளனர்.
ஆனால், தனிப்பட்ட நபரை, குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு, நுவரெலியா பிரதேச செயலாளர் ஊடாக, எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த காணியை வழங்காது, அவர், பலவந்தமாக வைத்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமாக காணியை பயன்படுத்தும் நபர், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கொடுப்பவையும் செலுத்துவதில்லை. இந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles