அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலையை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் தோட்டா காது பக்கத்தில் சிராய்த்துக் கொண்டு சென்றதால் ட்ரம்ப் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே அமர்ந்துவிட்டார்.
அதன்பின்னர் அவருடைய பாதுகாவலர்கள் ட்ரம்ப்பை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
மேலும் அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெய்ப்பாதுகாவலர்கள் அவரை அழைத்துச் செல்கின்ற போதும், முகத்தில் இரத்தத்துடன் எழுந்து நின்ற டிரம்ப் கைகளை உயர்த்தி போராடுங்கள் போராடுங்கள் என தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
ட்ரம்ப் உரையாற்றிய மேடைக்கு எதிரே இருந்த கட்டடத்தின் கூரையில் இருந்தே ஒருவர் ட்ரம்பை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் அடையாளம் காணப்பட்டு, உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
படுகொலை முயற்சி என்ற அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.