நெடுநாள் மீன்பிடி படகுகள் இரண்டில் தீ விபத்து!

0
20

திக்வெல்ல- நிக்வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த நெடுநாள் மீன்பிடி படகுகள் இரண்டு தீப்பிடித்து எரிந்துள்ளன. துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த போதே இன்று (17) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது