‘மீண்டும் ஊருக்கு போகலாம்’ என்னும் தொனிப்பொருளில், நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்திற்கொண்டு நடத்தப்படும், நெடுவூர் திருவிழா, எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை, நெடுந்தீவு மண்ணில் இடம்பெறும் என, நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன ஸ்தாபகர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.