நெல்லைக் கொள்வனவு செய்வதில் நெல் சந்தைப்படுத்தல் சபை நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் இவ்வாறான பிரச்சினைகள் இருந்து வந்தது. தற்போது அவை தீர்க்கப்பட்டுள்ளன. ஆகக்கூடிய விலைக்கு விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் ஆற்றல் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உண்டு என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.