நெல் விற்பனை குறித்து பொலன்னறுவை விவசாயிகளின் அறிவிப்பு!

0
263

ஒரு கிலோ நெல்லை 120 ரூபாய்க்கும் குறைவாக வழங்குவதற்கு தாம் தயாராக இல்லை என்று, பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜகத் அருண கீர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
இரண்டு சிறுநீரகங்களையும் காப்பாற்ற இயற்கை உரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்திய அரசாங்கம், தற்போது வெளிநாடுகளிலில் இருந்து காபனிக் உரத்தை பயன்படுத்தி விளைந்த அரிசியையா இறக்குமதி செய்கின்றது.
காபனிக் உர பயன்பாடு காரணமாக இன்று விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விளைச்சல்கள் 40,50 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் நெல்விளைச்சல் 60 சதவீதமாக குறைந்துள்ளது.
இதற்கு மாற்றீடாக விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த கூறுகிறார்.
அமைச்சரின் கருத்து தொடர்பில் மீண்டும் மீண்டும் கவனம் செலுத்துமாறு நாட்டிலுள்ள சகல விவசாயிகளுக்கும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.