ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதியில், பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையை தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரையில் 25 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.