நேபாள தலைநகர் கட்மண்டுவில் 65 பயணிகளுடன் பயணித்த 2 பேருந்துகள் இன்று அதிகாலை நிலச்சரிவில் சிக்கியுள்ளன.
நிலச்சரிவில் சிக்கிய பேருந்துகள் ஆறொன்றில் விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பயணிகளில் மூவர் ஆற்;றில் குதித்து நீந்தி கரை சேர்ந்துள்ளதுடன் உடல்நலக் குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.