நேபாளத்தில், பருவப் பெயர்ச்சி மழை காரணமாக, அதிகளவான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவு, மின்னல் தாக்கம் மற்றும் கன மழை காரணமாக, 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், நிலச்சரிவில் சிக்கி பலியானமை, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன மழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில், பருவ காலத்தின் போது ஏற்படும் மழை காரணமாக, பல இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என, தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
