நைஜீரியாவில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
வடமேற்று நைஜீரியாவில், ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாயப் பணிகளுக்காகத் தினந்தோறும் ஆற்றினைக் கடந்து செல்வதாகவும் இந்நிலையில் 70 பேர் படகில் சென்ற போது திடீரென ஆற்றில் கவிழ்ந்த படகில் பயணித்த விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிpழந்ததோடு 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.