அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இரண்டாம் உலக யுத்தத்தையும் உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பையும் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரான்சின் நோமண்டி தரையிறக்கத்தின் 80 வருடநிகழ்வில் உரையாற்றியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்புடன் இரண்டாம் உலக யுத்தத்தை ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
நோமண்டி தரையிறக்கத்தின் போது உயிரிழந்த 9388 அமெரிக்க படையினரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து உரையாற்றிய பைடன் உலகில் ஜனநாயகம் மீண்டும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் மேற்குலகின் நடவடிக்கையை சர்வாதிகாரிகள் உன்னிப்பாக அவதானிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் என்ன நடக்கின்றது என உலகின் சர்வாதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டுள்ளனர் நாங்கள் ரஸ்ய உக்ரைன் மோதலில் இருந்து விலகி ஓடமாட்டோம் அவ்வாறு செய்தால் உக்ரைன் அடிமைப்படுத்தப்படும் எனபைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாத்திரம் அது முடியாது உக்ரைனின் அயல்நாடுகள் அச்சுறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பா முழுவதும் அச்சுறுத்தலிற்குள்ளாகும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதி மீது நேரடி தாக்குதலை தொடுத்துள்ள பைடன் அவரை கொடுங்கோலன் என குறிப்பிட்டுள்ளார்.
