பங்களாதேசில் அரச தொலைக்காட்சியின் தலைமையகத்திற்கு தீவைப்பு

0
53

பங்களாதேசில் அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீடுகளிற்கு எதிரான மாணவர் போராட்டம் தொடருகின்ற அதேவேளைஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் அரசதொலைக்காட்சி  தலைமையலுவலகத்திற்கு தீவைத்துள்ளனர்.

டாக்காவில் தலைமை அலுவலகத்திற்குள் பலர் சிக்குண்டுள்ளனர்.உள்ளே சிக்குண்டுள்ளவர்கள் தங்களை காப்பாற்று தீயணபை;பு பிரிவினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பங்களாதேசில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தவர்களிற்கு  அரசாங்க வேலைவாய்ப்பில்; ஒதுக்கீட்டை எதிர்க்கும்  மாணவர்களிற்கும் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

1971 ம் ஆண்டு சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் உட்பட விசேட குழுவினருக்கு ஆயிரக்கணக்கான அரசவேலை வாய்ப்புகளை ஒதுக்கும் நடைமுறை பங்களாதேசில் காணப்படுகின்றது.

இந்த முறையின் கீழ் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்தவர்களிற்கு அரசவேலைகளில் ஒதுக்கீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2018 இல் இந்தஒதுக்கீட்டு முறை இடை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு 30 வீத ஒதுக்கீட்டை மீள வழங்கவேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது .

இது புதிய ஆர்ப்பாட்டங்களிற்கு வழிவகுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களிற்கு ஆறு வித ஒதுக்கீட்டை  ஏற்றுக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர்.

இந்த ஒதுக்கீட்டை நான்கு வாரங்களிற்கு ஒத்திவைப்பதாக கடந்த வாரம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நான்கு வாரங்களில் இது குறித்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மாணவர்களை கல்விநடவடிக்கைகளை தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு முறையை நிறுத்தவேண்டும் என கோரி திங்கட்கிழமை முதல் பங்களாதேஷ் பல்கலைகழகங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை ஒதுக்கீடு முறையை எதிர்க்கும் மாணவர்களும் ஆளும்ளஅவாமிலீக் கட்சிக்கு ஆதரவான மாணவர்களும் டாக்கா பல்கலைகழகத்தில் மோதலில் ஈடுபட்டனர்  என தெரிவித்துள்ள பொலிஸார் கற்களைவீசியும் தடிகள் போன்றவற்றில் தாக்கியும் மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளனர்.