பங்களாதேஷில் அதிகரித்துள்ள மோதல்கள் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன-இராணுவத் தளபதி

0
23

பங்களாதேஷில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவத் தளபதி வாகர் உஜ் ஜமான் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் கடந்த ஓகஸ்ட் முதல் நடைபெற்ற தொடர் போராட்டங்களையடுத்து வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

அதன்பின்னர் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அங்கு இயங்கி வருகிறது. பங்களாதேஷில் தொடர்ச்சியாகப் போராட்டங்களும் மோதல்களும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அந்த நாட்டு இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால் ,ஆயுதப்படைகளுக்கு கடமை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் ஒற்றுமையுடனும் இநிறுவனங்கள் கட்டுப்பாட்டுடனும் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளார். இது நாட்டின் ஒற்றுமைக்கும் சுதந்திரத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் எனக் குறிப்பிட்டார்.